2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கொரோனா அச்சம்; கந்தளாயில் கடைகள் பூட்டு

Editorial   / 2020 ஜூலை 15 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் பிராந்திய சுகாதார அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில், இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கந்தளாய் நகரில், கொரோனா தொற்றாளர் சென்றதாகக் கண்டறியப்பட்ட 05 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  

கந்தளாய் நகரிலுள்ள புடவைக் கடைகளும் சில்லறைக் கடைகளுமே இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

மேற்படி வர்த்தக நிலையங்களில் கடமையாற்றிய 08 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என, கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்தியப் பிரிவு தெரிவித்தது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்த இராணுவ வீரயொருவருக்கே  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இராணுவ வீரர் விடுமுறையில் சென்று, திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்றுள்ளார் என்றும் வைத்தியப் பிரிவு தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X