Freelancer / 2022 ஜூன் 21 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் குடும்பத் தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (20) குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025