2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிழக்கில் கொரோனா தொற்று குறைகிறது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுத் தாக்கங்களினதும் மரணங்களினதும் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக இன்று  (20) ஊடகங்களுக்கு  கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஓகஸ்ட் 3ஆம் மற்றும் 4ஆம் வாரங்களில் சராசரியாக 6,000 தொற்றாளார்களும் 100 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகின.

“எனினும், செப்டம்பர் முதலாம் வாரத்தில் 4,400 தொற்றாளர்களும் இரண்டாம் வாரத்தில் 3,300 தொற்றாளர்களும் 80 மரணங்களும், மூன்றாம் வாரத்தில் 2,000 தொற்றாளர்களும் 67 மரணங்களும்  நான்காம் வாரத்தில் 1,104 தொற்றாளர்களும் 42 மரணங்களும் ஐந்தாம் வாரத்தில் 801 தொற்றாளர்களும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளன.

“இவ்வறிக்கையின்படி, கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும் மரணங்களும் படிப்படியாக குறைந்துகொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறே  முழு நாட்டிலும் படிப்படியாக குறைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .