2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

கிண்ணியா பிரதேச சபை தவிசாளராக மீண்டும் நிஹார்

Princiya Dixci   / 2020 நவம்பர் 17 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ் , ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.முஹம்மது நிகார் வாக்கெடுப்பின்றி, ஏகமானதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் தலைமையில் இன்று  (17) காலை நடைபெற்றது. 

கடந்த 28 மாதங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு உறுப்பினர்கள் தவிசாளராக இருந்துள்ளனர். இவர்களில் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள முகம்மது  நிகார் முதல் ஆறு மாதங்கள் தவிசாளராக இருந்து, இராஜினமா செய்ததையடுத்து, அப்போது அதே கட்சியைச் சேர்ந்த எம்.எச்.சைபுதீன் (சனுஸ்) தவிசாளரானார். 

இந்த நிலையில், கடந்த 22  மாதங்களாக  தவிசாளர் பதவியை வகித்துவந்த சனுஸ், அண்மையில்  இராஜினாமா செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கிண்ணியா பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X