2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கிண்ணியா தள வைத்தியசாலையில் தாதியர் பணிப் பகிஸ்கரிப்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 01 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ் 

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களின் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம், இன்று (01) முன்னெடுக்கப்பட்டது.

அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை தாதிமார் சங்கம் மற்றும் பொது வைத்திய தாதிகள் சங்கம் முதலான சங்கங்கள் இணைந்தே இந்த பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தன.

இதனால் நேற்றையதினம் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டன.

இந்தப் போராட்டம் குறித்து தாதியர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “சுகாதாரத் துறையில் ஏற்பட்டிருக்கின்ற குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி, பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் தீர்வு எட்டப்படாத நிலையிலேயே, இந்த சுகவீன விடுமுறைப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.

“கொவிட் 19 அசாதாரண காலத்தில் வைத்தியர்களை விட தாதியர்கள் பலர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்குரிய எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை. அத்தோடு, பதவி உயர்வு மற்றும் விடுமுறைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

“எனவே, தாதியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இந்தப் பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்தனர்.

இந்தப் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டம், நாளையும் (02) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .