2025 ஏப்ரல் 20, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை

Freelancer   / 2022 ஜூலை 09 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள தோனா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு கடந்த நான்கு நாட்களுக்கு பின்னர் நேற்று (08)  மாலை  எரிபொருள் வந்ததை அடுத்து, அங்கிருந்த மக்களுக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதனை தொடர்ந்து, கைகலப்பில் முடிந்தது.

இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு காரணம் வரிசையை மீறியதனாலேயே இவ்வாறு  குழப்ப நிலை ஏற்பட்டது

நான்கு நாட்களுக்கு பின்னர் பெற்றோல் வந்ததனால் அவற்றை பெறுவதற்காக  முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்கள் மிக நீண்ட வரிசையில் காணப்பட்டன.

நான்கு நாட்களாக காத்திருந்த மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள்  வரிசையில் இருந்த போதிலும், இடையில் வந்தவர்கள் எரிபொருள்  பெற முற்பட்ட போது குழப்ப நிலை உண்டானது.

பொலிஸார் மற்றும் விமானப் படையினர் தலையீட்டினால் சுமுகமான நிலைக்குகொண்டு வரப்பட்டது. பின்னர் எரிபொருள் மீண்டும் வாகனங்களுக்கு வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றது இருந்த போதிலும் கிண்ணியாவில் விநியோகிக்கப்பட்ட பெற்றோலில் பலருக்கு கிடைக்காமை ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் நான்கு நாட்கள் வீதியில் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருந்தும் எரிபொருள் கிடைக்கவில்லை .6600 லீற்றர் கொண்ட பெற்றோல் பவுசரே நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்ட போதிலும் அது போதாமையால் பலர் ஏமாற்றமடைந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X