2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

கிண்ணியாவில் தமிழக அரசின் 2ஆம் கட்ட உதவி

Princiya Dixci   / 2022 ஜூலை 07 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

இந்தியா, தமிழ் நாட்டினுடைய 2ஆம் கட்ட மனிதாபிமான நிவாரண பொதிகள், கிண்ணியா பிரதேச செயலாளரால் உப்பாறு கிராம சேவையாளர் பிரிவு மக்களுக்கு, இன்று (07)  கையளிக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையின் கீழ் நடைபெற்ற இவ் நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவை அதிகாரிகள் முதலானோர் கலந்துகொண்டனர்.

இந்தியா தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1,450 பொதிகள், 31கிராம சேவகர் பிரிவில் உள்ள 7,250 குடும்பங்களுக்கு மொத்தமாக  கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வழங்கப்பட்டன.

இவற்றுள் உப்பாறு கிராம சேவகர் பிரிவில் உள்ள 100 குடும்பங்களுக்கு 100 பொதிகள் நேற்று (07)  வழங்கி வைக்கப்பட்டன.

பொருளாதார ரீதியாக தொழில் இழந்த பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்குகின்ற தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கே இவ்வாறு இந்த நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X