2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கஷ்டங்களை வேடிக்கை பார்க்கிறது அரசாங்கம்

Princiya Dixci   / 2022 மார்ச் 30 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

எரிபொருள் விலை யேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த கிண்ணியா நகர சபை உறுப்பினர் முஸ்தபா நஸ்ருதீன்,  நகர சபையின் 48 அமர்வுக்கு, நேற்று (29) சைக்கிளில் சென்றார்.

“பொருள்களின் விலையேற்றத்தால் மக்களின் வாழ்க்கையை வதைக்காதே”, “எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியவசியப் பொருள்களின் விலையேற்றத்தை உடன் நிறுத்து” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகையை சைக்கிளில் வைத்திருந்தார்.

அத்தோடு, சபை அமர்விலும் எரிபொருள், எரிவாயு, அத்தியவசியப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்களின்  விலையேற்றத்தை எதிர்த்து பிரேரணை ஒன்றினை அவர் முன் வைத்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், “ நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தொடர் விலை ஏற்றம் பொருள்களின் தட்டுப்பாடு அத்தனை தரப்பு மக்களையும் அதாளபாதாளத்துக்கு தள்ளியுள்ளது.

“மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் அறிக்கைவிட்டு, வேடிக்கை பார்க்கின்றது இவ்வாறான நிலைமை மாற வேண்டும்.

“மக்களின் கல்வி, மருத்தும் என்பன பாதிக்கப்பட்டு, நாட்டை  விட்டும் வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

“பொருள் கொள்வனவிற்காக வரிசையில் மக்கள் காத்திருக்கின்ற நிலையில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடுகிறது. இவ்வாறான நிலையை மாற்றி, மக்களுடைய வாழ்க்கையில் சாதகமான தீர்வை இந்த அரசாங்கம் முன்வைக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .