2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோர் தீ வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை - கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் செய்கை பண்ணப்பட்ட கரும்புச் செய்கைக்கு, இனந்தெரியாதோரால் நேற்று (26) பிற்பகல் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சீனித்தொறிற்சாலையை அண்டிய பகுதியில் எம்.சி.சுகர்ஸ் லங்கா நிறுவனத்தால் கரும்பு விதைகள் நடப்பட்ட நான்கு ஏக்கர் கரும்புச் செய்கைக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர், பொலிஸார், பாதுகாப்பு படையினர், தொழிலாளர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தற்போது சீனித்தொழிச்சாலை இயங்காது தூர்ந்து போயியுள்ளதால் கரும்புகளை அரைக்கவும் முடியாது, கொண்டு செல்லவும் முடியாது, நட்டம் எதிர்கொள்ளப்படுகிறது. எனினும், தொழிற்சாலையை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறும், தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .