Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2021 ஜூலை 04 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், அதிக வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறும் பிரயாணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கந்தளாய் நகரிலும் மற்றும் பேராறு பிரதேசத்திலும் கட்டாக்காலி மாடுகள் வீதிகளை இரவிலும் பகலிலும் அசுத்தப்படுத்துவதோடு வீதி விபத்துக்களும் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பல தடவைகள் கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளருக்கு எழுத்து மூலம்கோரிக்கை விடுத்தும் இன்னமும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.
எனவே பாரிய வீதி விபத்தில் உயிர்சேதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago