2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கண்காட்சியும் விற்பனையும்

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ்

மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருகோமலை மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்த பெண்கள் சார்ந்த சுய தொழில் முயற்சி சந்தை கண்காட்சியும் விற்பனையும், மாவட்டச் செயலக வளாகத்தில் இன்று (03) காலை 09 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவற்றில் வீடுகளில் கையால் செய்யப்பட்ட பொருட்கள், நஞ்சற்ற பொருட்கள், ஏனைய உற்பத்திப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, மலிவு விலையில் பொருட்கள் விற்கப்பட்டதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இதனை சமூக சேவைத் திணைக்களம் மற்றும் அரசாங்க அதிபர் காரியாலயம், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு என்பன ஏற்பாடு செய்திருந்தன.

திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நுவான் கபில அத்துக்கோரள , கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் திருமதி ஆரியவதி கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .