2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயினுடன் பெண் கைது

Freelancer   / 2022 மார்ச் 28 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை பிரதேசத்தில் கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன்  நேற்றிரவு(27) பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீனக்குடா இரகசியப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற   தகவலை அடுத்து வீடொன்றைச் சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி வைத்திருந்த கட்டுதுவக்கு ஒன்றும், 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீட்டிலிருந்து 33 வயதுடைய பெண்ணொருவரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய, கைப்பற்றப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் அவருடைய தந்தையுடையது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பெண்ணின் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும், வேலை நிமிர்த்தம் கொழும்புக்குச் சென்று இருந்ததாகவும் குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண்ணின் தந்தையை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணை இன்றைய தினம் திருகோணமலை  நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X