2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

ஒரே இடத்தில் மூன்றாவது விபத்து ; பெண் பலி

Janu   / 2024 ஜூலை 17 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய், அக்போபுர கித்துள் ஊற்று பகுதியில்   இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (17) காலை இடம்பெற்றுள்ளது .

கந்தளாய் , கித்துள் ஊற்று பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் பயணித்த வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கழகத்தினால், குறித்த வேன் , வீதியோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

கித்துல் ஊற்று பகுதியில் அதே இடத்தில் கடந்த பதினைந்து நாட்களில் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அக்போபுர பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

எப்.முபாரக் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .