2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

ஊழியர்களுக்கு கொரோனா; இரு வங்கிகளுக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம் கீத்

திருகோணமலை நகரில் இரு வங்கிகளின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (04) உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, மேற்படி இரு வங்கிகளும்  மூடப்பட்டுள்ளன.

திருகோணமலை நகர், மத்திய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றும் என்.சீ வீதியில் அமைந்துள்ள மற்றொரு தனியார் வங்கியுமே இவ்வாறு மூடப்பட்டுள்ளன. 

மத்திய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் கடமை புரியும் பெண் ஊழியருக்கும் அவரின் தாயாருக்கும் மற்றும் அந்தப் பெண்ணின் கணவரான என்.சீ வீதி தனியார் வங்கியில் கடமை புரியும் நபருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X