Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 23 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ.அச்சுதன், ஏ.எம்.ஏ.பரீட், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “நான் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மாவட்ட உள்ளூராட்சி சபையொன்றின் செயற்பாடுகள் பற்றி பகிரங்கக் குற்றச்சாட்டு வெளிவருமளவுக்கு சென்றிருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.
“உப்பாறு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீதி கிரவலிடப்பட்டு புனரமைக்கப்பட்டதாக பொய்யாகக் கூறி, கிண்ணியா பிரதேச சபையால் நிதி செலவிடப்பட்டுள்ளதாக அந்தச் சபையின் உறுப்பினர்கள் சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
“ஆனால், அந்த வீதி கிரவலிட்டு செப்பனிடப்படவில்லை. சில மணித்தியாலயங்கள் மோட்டர் கிரட்டர் வேலை மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் அரச உத்தியோகத்தர்களும் பொதுநல அமைப்புகளும் தெரிவித்துள்ளனர்.
“அதேபோல, நீர்வழிந்தோடும் குழாய்கள் பொருத்தப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக நிதி பெறப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களுக்கு சில மாத காலம் வரவுசெலவுகள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் இவை போல வேறு சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
“இவை தொடர்பில் நீதியான விசாரணை செய்யப்பட வேண்டும். தவறு இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago