Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 06 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், தம்பலகாமம் பிரதேசத்தில் எடுக்கப்படவேண்டிய முன்னெடுப்புகள் சம்பந்தமான கலந்துரையாடல், பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் பொறுப்பதிகாரி, பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றலுடன், தம்பலகாம பிரதேச செயலகத்தில் நேற்று (05) நடைபெற்றது.
கொவிட் 19 கட்டுப்பாடு தொடர்பிலும் சுகாதார அறிவுறுத்தல்கள், சமூக இடைவெளி தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.
இதன்போது, அத்தியாவசியமற்ற முறையில் பொதுமக்கள், ஊழியர்கள் ஒன்றுகூடுதலைத் தவிர்ப்பதற்கும், ஏனைய பிரதேசங்களிலிருந்து வருபவர்கள் தொடர்பாக தவகல்களை பிரதேச செயலகம், பொலிஸ், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பதிவு செய்வதற்கும், பொதுச் சந்தையை - முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி மைதானதில் நடத்துவதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago