Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச் ஹஸ்பர்
கிழக்கு மாகாண பிரதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஊடகர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றில் இன்றைய தினம் (08)இடம் பெற்றது.
இதற்கமைய, நாளைய தினம் (09) வௌ்ளிக்கிழமை, இரு நாட்கள் நடை பெறவுள்ள குறித்த செயலமர்வினை வெகுசன ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இதில் வெறுப்புப் பேச்சு ,தொடர்பாடல் முறை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. முதல் நாளாகிய இன்றை தினம்(08) வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வி.பி.கே.அனுச பல்பிட்ட கலந்து கொண்டு இவ்வாறு கருத்துரைத்தார்.
மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழி தொடர்பாடல் துறை பீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி வி.ஜெ.நவீன் ராஜ்,சட்டத்தரணி ஜகத் லியானாராய்ச்சி,சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் சுதர்சன குணவர்தன உட்பட வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள்,பிரதேச ஊடகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago