Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 06 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், அ.அச்சுதன், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசியத் திட்டத்தின் கீழ், எதிர்வரும் 9ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ஏற்ப, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில், உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் தொழில்களின் மேம்பாட்டுக்கான முன்-மேம்பாட்டுக் குழு, இன்று (06) கூடியது.
9 ஆம் திகதி நடைபெறவிருக்கும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மீன்வளம், விலங்கு பொருட்கள், தொழில், உள்ளூர் ஆடைகள் மற்றும் தேங்காய், பனை தொடர்பான தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
மேற்கண்ட பகுதிகள் தொடர்பான திட்டங்களை, உள்ளூர் உற்பத்தி தொழில் மேம்பாட்டுக் குழுவில் சமர்ப்பிக்கவும் முன்மொழியப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாகாண பிரதமச் செயலாளர் துசித பி.வணிகசிங்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரள, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதானநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago