2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அமைப்பாளர்கள் நியமனம்

Editorial   / 2022 ஜனவரி 09 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள  மூன்று தேர்தல் தொகுதிகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  அமைப்பாளர்களை நியமித்துள்ளது.

இதன்படி, மூதூர் தொகுதியின் அமைப்பாளராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை தொகுதிக்கான அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரகரவும் சேருவில தொகுதிக்கான அமைப்பாளராக மகேஷ் சதுரங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.கே.ஏ.டிஸ். குணவர்தனவின் புதல்வர் நளின் குணவர்தன நியமிக்கப்பட்டார்.  

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை, கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டின்போது  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்  மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .