Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 09 , பி.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட வேண்டும் என்று பல கட்சிகள் விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகள் இந்த விவகாரம் தொடர்பாக விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கடந்த தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற பின்னடைவுகளைக் கருத்தில் கொண்டு, சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி 'யானை' சின்னத்தில் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முந்தைய தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி முன்னிலையில் இருந்ததால், மற்ற கட்சிகள் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளன. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
57 minute ago
1 hours ago