2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

’Peace Ark’ கப்பலை பிரதமர் பார்வையிட்டார்

Mayu   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கத்தின் Mission Harmony -2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான  'Peace Ark' என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

'Peace Ark'  என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளை வழங்கவுள்ளது.

இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

 178 மீ நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில் கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

மேலும், உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார். கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.

பீஸ் ஆர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது  இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொமடோர் மேஜர் ஜெனரல் ஹீ யோங்மிங், கொமடோர் மேஜர் ஜெனரல் யிங் ஹொங்போ, கப்டன் டெங் கியாங் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X