Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Simrith / 2024 டிசெம்பர் 09 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆளும் கட்சியுடன் கூடிய இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இந்த ஆண்டு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். முன்னதாக, தான் அரசாங்கத்துடன் இணைந்த தொழிற்சங்கத்தை வழிநடத்துவதாகவும் எனவே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் கொடுப்பனவு பெற வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடாத்தத் தேவையில்லை என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், CEB தனது ஊழியர்களுக்கான எந்தவொரு போனஸையும் இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை.
அடுத்த வருடத்தின் முதல் பாதியில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் CEB நிராகரித்துள்ளது.
இந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அடுத்த வருடம் அதிகரிக்கக் கூடிய ஒரு பில்லியன் மின்சார அலகுகளின் கூடுதல் தேவையை பூர்த்தி செய்வதற்கு குறைந்த செலவில் எரிசக்தி ஆதாரங்கள் இல்லாததே இதற்கு காரணம் என CEB தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவை 17.5 பில்லியன் அலகுகளாகும்.
ஹைட்ரோ மற்றும் நிலக்கரி பெறுதிறன் 12 பில்லியன் அலகுகளாக அதிகபட்ச நிலையை எட்டியுள்ளது - மேலும் மிகுதியானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் எண்ணெய் கலவையிலிருந்து பெறப்பட வேண்டும்.
கிடைக்கக்கூடிய மற்றும் தொடர்ந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சுமார் மூன்று பில்லியன் அலகுகள் எண்ணெயில் இருந்து பெறப்பட உள்ளன.
மின் கட்டணத்தில் மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி செலவில் இருந்து வருகிறது என மின்சார சபை சீர்திருத்த செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.
இக்குறைபாட்டுக்கான ஒரே மாற்று வழி, காற்று மற்றும் சூரிய சக்தியுடன் ஒரு மேலதிக எரிபொருளாக LNG (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு) ஐயும் பயன்படுத்துவதே ஆகுமென அவர் கூறினார்.
இவ்வருட இலாபம் குறித்து வினவிய போது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) போன்ற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடனாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்குள் ரூ.112 பில்லியன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"2024ல் வருவாய் வேறுபாடாக ரூ.41 பில்லியன் மட்டுமே மீதம் உள்ளது. இது கட்டண திருத்தத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago