2025 ஜனவரி 15, புதன்கிழமை

9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை: 69 வயதானவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

சிறுமியை பாலியல் சேஷ்டை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில்   அதிர்ஷ்ட இலாப சீட்டு  விற்பனை செய்யும்   நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த திங்கட்கிழமை (13) இவ்விடயம் குறித்து  சிறுமியின் தாயார் முறைப்பாடு ஒன்றை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அதிர்ஷ்ட இலாப சீட்டு  விற்பனை செய்யும்   நபரை  பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி  அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்)  விற்பனை செய்பவர் எனவும்  அம்பாறை  பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட  விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும்  பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி   மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X