2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

5 நாட்களில் ரூ.11 இலட்சத்துக்கு சாப்பிட்டு மகிழ்ந்த தளபதிகள்

Editorial   / 2023 டிசெம்பர் 03 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிக்கு வந்த இராணுவத் தளபதிகள் குழு, உண்டு மகிழ்வதற்காக, ஐந்து நாட்களுக்கு கிட்டத்தட்ட பதினொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டது என  தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக திறைசேரி விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு முரணாக இந்த தொகை செலவிடப்பட்டுள்ளதாக  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கையின் படி, மேற்படி பணியாளர் கல்லூரியின் விவகாரங்களை ஆய்வு செய்ய வந்த பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் முப்படை தளபதிகளுக்கே இவ்வாறு செலவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கல்லூரிக்கு 2019 முதல் 2022 வரை 13 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் கட்டப்பட்ட நான்கு அடுக்கு நூலகம் மற்றும் தேர்வுக் கூட கட்டிடத்தில் தண்ணீர் கசிவு பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .