2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

48 மணி நேரத்தில் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் இந்தியா

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
அதன்படி இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவன,
 
பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
இரு உயர்ஸ்தானிகராலயங்களின் அலுவலர்களின் எண்ணிக்கையும் 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
இந்தியா தனது பாதுகாப்புப் படைகளை 'உயர் விழிப்பு நிலையில்' வைத்துள்ளது.
 
அத்துடன், சார்க் வீசாவில் இந்தியாவில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .