2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

4 தங்க பெண்டன்களை களவாடிய பெண் சிக்கினார்

Editorial   / 2024 நவம்பர் 08 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகர் ஒருவரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இருபத்தி ஏழு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாய் பெறுமதியான 04 தங்கப் பதக்கங்கள் (பெண்டன்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கள​வாடி சென்ற மற்றுமொரு வர்த்தக பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட இந்த பெண்,  கொழும்பு - 10 ஐ வசிப்பிடமாகக் கொண்ட 45 வயதான இவர் அடிக்கடி விமானங்களில் ஈடுபடுவதுடன் பல்வேறு வகையான பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

 இவர் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல், புதன்கிழமை (06) அன்று காலை 05:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

 அவர் அந்நாட்டில் 118 கிராம் 980 மில்லிகிராம் எடையுள்ள 04 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார்.  

 04 பதக்கங்களையும்  காகிதத்தில் சுற்றி ப்ரொன் பேப்பருக்கு வதை்து,  வெளியே சாக்லேட் போல இருக்கும் வகையிலேயே எடுத்து வந்துள்ளார்.

 அவர் கொண்டு வந்த மற்ற பொருட்களை விமான நிலைய தள்ளுவண்டியில் ஏற்றி, விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல அவருக்கு தெரிந்த மற்றொரு வர்த்தகரான பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

 அங்கு அவர் வாங்கிய தங்கப் பதக்கங்கள் அடங்கிய  பிரவுன் பேப்பர் பை டிராலியில் இருந்த சிறிய கொள்கலனில் வைக்கப்பட்டு இருந்தது.

 மீதொட்டமுல்ல வெல்லம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 43 வயதான வர்த்தகப் பெண்மணியான இவர், விமானம் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

 விமான நிலைய சுங்க வளாகத்தில் அறிவிக்கப்படாத பசுமையான பாதையில் இந்த தள்ளுவண்டியை வெளியே கொண்டுபோய் விமான நிலைய தள்ளுவண்டிகளை அங்குள்ள "போர்ட்டரை" பயன்படுத்தி எடுத்து வந்து ஒப்படைத்துள்ளார்.

 விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்த பொருட்கள் அனைத்தையும் ஸ்கேனிங் இயந்திரங்களுக்கு உட்படுத்தியுள்ளனர், மேலும் சாக்லேட் போல் தோன்றும் பழுப்பு காகித பை சோதனையில் சேர்க்கப்படவில்லை.

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இந்த பெண், குறித்த வர்த்தகரிடம் உரிய பொருட்களை கையளித்து விட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

 சிறிது நேரத்தின் பின்னர் வர்த்தகர் தனது தங்கப் பதக்கத்தை காணவில்லை என்பதை உணர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

 இதன்படி வெல்லம்பிட்டிய பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார், வர்த்தகப் பெண்ணை அவர் திருடிய 04 தங்கப் பதக்கங்களுடன் கைது செய்து வௌ்ளிக்கிழமை (08) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .