2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

4 சம்பவங்கள்: ஐவர் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

துப்பாக்கிச் சூடு, பெண்ணொருவருக்கு விஷ ஊசி ஏற்றி கொன்றமை, கைலப்பில் ஒருவரை​ படுகொலைச் செய்தமை மற்றும் பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தது ​ஆகிய நான்கு சம்பவங்கள் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் கணவன் பலி: மனைவி படுகாயம்

வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரலுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த தம்பதியினர் மீது இனந்தெரியாத நபர்கள் செவ்வாய்க்கிழமை (24) இரவு வேளையில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கணவன் (வயது 32)  உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவி (வயது 30) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மனைவி தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை எனத் தெரிவித்த வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மனித படுகொலைக்கு முயற்சி: தம்பதி கைது

மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அருகில் ​டிசம்பர் 14ஆம் திகதியன்று  பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு மனித படுகொலைக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் துப்பாக்கியுடன் மறைந்திருந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவி, துப்பாக்கியை அப்புறப்படுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த துப்பாக்கி ஓட்டோ சாரதி ஒருவரிடம் கையளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, ஜம்பட்டா வீதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) ஓட்டோ சாரதி, கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஓட்டோ சாரதியான 34 வயதான நபரிடம் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனித படுகொலை: இருவர் கைது

மாதம்பை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெமடபிட்டிய பிரதேசத்தில், இரண்டு நபர்களுக்கு இடையில் டிசெம்பர் 22ஆம் திகதியன்று வாய்த்தர்க்கம் முற்றிப்போய் கைகலப்பாக மாறியதை அடுத்து, மனக்குலம் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபர் மரணித்த சம்பவம் தொடர்பில், மாதம்பே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அந்த விசாரணையின் பின்னர், 28 மற்றும் 53 வயதான நபர்கள் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டனர்.

மனித படுகொலை: ஒருவர் கைது

திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேகம பிரதேசத்தில் இனந்தெரியாத ஊசியை செலுத்தி 69 வயதான பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், செவ்வாய்க்கிழமை (24) அன்று 42 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி பிரச்சினை காரணமாக இவர் இந்த படுகொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது என திக்வெல பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X