Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2024 ஜூன் 23 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தனர்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் தந்தை சிறுகுற்றச் செயல் தொடர்பில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்து வருகின்றார்.
தாயார் கூலி வேலைக்கு செல்லும் போது தனது பிள்ளைகளை அயலில் உள்ள வீட்டில் விட்டுச் செல்வது வழமை. இவ்வாறு விட்டுச் சென்ற நிலையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வவுனியா பொலிஸில் தாயாரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
17 minute ago
22 minute ago