Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 ஏப்ரல் 29 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டுகளின் கீழ், மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய தந்தை, இளைஞன் மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் மொனராகலை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு கீழ் இடம்பெற்றுள்ளன.
மகளை வன்புணர்ந்த தந்தை கைது
வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகொட பகுதியைச் சேர்ந்த தனது 12வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மே (26) கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தை மே மாதம் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
119 என்ற அவசர தொலைபேசி அழைப்பிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 12 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான நபரை வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். .
வீட்டில் யாரும் இல்லாத போது சந்தேக நபரான தந்தை தனது மகளான சிறுமியை அறைக்கு அழைத்துச் சென்று அவரது விருப்பத்திற்கு மாறாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தனக்கு நேர்ந்ததை தன்னுடைய தோழிக்கு தெரிவித்தபோதே, அந்த தோழி, 119 என்ற அவசர தொலைபேசி அழைப்பிற்கு தகவல் கொடுத்தாள்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெல்லவாய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி டி.எம்.கருணாதிலக தெரிவித்தார்.
மாணவியை கர்ப்பிணியாக்கிய இளைஞன் கைது
குடோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாலிவெவ தெள்ளுல்ல காலனியில் 11 தரத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியை கர்ப்பிணியாக்கிய 22 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை குடோயா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 25ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த சிறுமி கடந்த 25ஆம் திகதி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இது குறித்து குடாஓயா பொலிஸாருக்கு வைத்தியசாலை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதையடுத்து, காதலன் கைது செய்யப்பட்டார்.
காலனியில் மாடுகளை பராமரிக்க வந்தவருடன் காதல்வயப்பட்டதன் பின்னர், சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அச்சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்காவின் காதலனால் வன்புணர்வு
புத்தல தம்பகஹ எலிய கட்டுகஹகல் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய 11 மாத சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞன் கடந்த (27) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19ம் திகதி பாடசாலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
25 வயதுடைய தனது சகோதரியின் காதலனுடன் காதல் உறவில் ஈடுபட்டு கடந்த மாதம் 03ஆம் திகதி அவருடன் வெளியேறி வெல்லவாய ஹுனுகட்டிய பிரதேசத்தில் ஐந்து நாட்கள் தற்காலிக விடுதியில் தங்கியிருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன் அவிசாவளை பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளனர். அதன்பின்னர், சந்தேகநபரின் வீட்டின் மறைந்திருந்த நிலையில், சந்தேக நபர் கடந்த (26) சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
என தெரிவித்த புத்தள பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
3 hours ago