Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூலை 13 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து சென்ற மாணவிகள் மூவரும், பாடசாலைக்குச் செல்லாது அன்றையதினம் பிற்பகல் இரண்டரை மணியளவில் வீடு திரும்பினர். அதுதொடர்பில் பெற்றோர் விசாரித்த போதே, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் சூக்கிரி எல்லையை பார்வையிடுவதற்குச் சென்றுள்ளர்.
கடந்த 12ஆம் திகதி சென்றிருந்த அந்த மூன்று ஜோடிகளில் இரண்டு காதலிகள் கடும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மற்றைய காதலி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலைக்குச் செல்வதாக அந்த மூன்று மாணவிகளும் வீடுகளில் சொல்லிவிட்டு சென்றுள்ளனர். எனினும்,பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என கிடைத்த தகவல்களின் பிரகாரம் தேடிபார்த்தபோது அந்த மூவரும் மோட்டார் சைக்கிள்களில் சென்றமை கண்டுப்பிடிக்கப்பட்டது.
பின்னர் இரண்டரை மணியளவில் மூன்று மாணவிகளும் தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுதொடர்பில் விசாரித்த போதே மேற்படி சம்பவம் அம்பலமானது. அந்த மாணவிகளின் காதலர்கள் மூவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூக்கிரி எல்லையை பார்வையிட அன்று காலையில் சென்றுள்ளனர். அதன்பின்னர் அருகிலிருக்கும் காட்டுக்குள் அழைத்துச் சென்று இரண்டு காதலிகளை காதலர்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளனர். மற்றொரு காதலன் தனது காதலியை துன்புறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம், காதலிகள் மூவரும் காதலர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதலர்கள் மூவரும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சுமணசிறி குணத்திலக்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago
57 minute ago
1 hours ago