Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 15, புதன்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மக்களின் இறைமைக்கு அர்ப்பணக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அடுத்த ஜனாதிபதி சட்டவிரோத ஜனாதிபதியாக இருப்பார். என்றார்.
நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் தலைமைக் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அடுத்த வருடம் நடைபெறவிருந்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதே பொருத்தமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படாவிட்டால் ஜனாதிபதியின் அனைத்து கடமைகளும் நீக்கப்படும் என்று தெரிவித்த பேராசிரியர் ஜி. எல். ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாவிட்டால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததன் பின்னர் மக்கள் அபிப்பிராயத்தை சோதிக்க வேண்டும் என முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். தெரிவித்திருந்தார். மக்களின் விருப்பதே அதிகாரத்தின் கேந்திர ஸ்தானமாகும். உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதைப் போன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும் பீரிஸ் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
49 minute ago
1 hours ago