2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

2 பெண்களுடன் நிர்வாண ஆட்டம்; பிக்கு கைது

Editorial   / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவகமுவ, பொமிரிய ரஸ்ஸபான பிரதேசத்தில் விஹாரைக்க சொந்தமானது எனக் கூறப்படும் வீட்டை நடத்தி வந்த பல்லேகம சுமன என்ற பிக்கு இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் சில பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பிக்குவை பொலிஸாருக்கு அழைத்து சாட்சியங்களை பதிவு செய்து கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (08) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த தேரர், தாய், மகள் எனக் கூறப்படும் இரண்டு பெண்களுடன் அந்த அறையில் நிர்வாணமாக இருந்த வேளையில், பிரதேசவாசிகளால் சுற்றிவளைக்கப்பட்டார். அதன்பின்னர், மூவர் மீதும் அங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதன்பின்னர், அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .