Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 16 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை (13) ஆம் திகதி உடப்புவ, கருகப்பனே கடல் பகுதியிலும் கடலோரப் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட முயன்ற சுமார் 145 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
கடல் வழியாக மேற்கொள்ளும் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஒடுக்கும் வகையில், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி, 2025 ஏப்ரல் 13 ஆம் திகதி அன்று வடமேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர், உடப்புவ கருகப்பனை மற்றும் கடலோரப் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. அங்கு குறித்த படகில் மூன்று (03) பைகளில் அடைக்கப்பட்டிருந்த நூற்று நாற்பத்தைந்து (145) கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கையிருப்புடன் நான்கு (04) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், இந்த கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு (02) நபர்கள் மற்றும் இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு (06) சந்தேக நபர்களும் 22 முதல் 52 வயதுக்குட்பட்ட பங்கதேனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆறு சந்தேக நபர்கள், உலர்ந்த மஞ்சள் பொட்டலம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
18 Apr 2025
18 Apr 2025