2025 மார்ச் 06, வியாழக்கிழமை

13 T-56 துப்பாக்கிகளை கைப்பற்றிய பொலிஸ்

S.Renuka   / 2025 மார்ச் 06 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டுல் (2025) இதுவரையிலான காலப்பகுதியில், குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்ட 13 T-56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இதனை குறிப்பிட்டார்.

 மேலும், 2025ஆம் ஆண்டில் இதுவரை 19 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் சம்பந்தப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

மீதமுள்ள ஏழு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகளின் விளைவாகும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக 68 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட காவல்துறை செய்தித் தொடர்பாளர், இலங்கை பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .