2025 ஜனவரி 23, வியாழக்கிழமை

10 பொருட்களின் விலைகள் குறைப்பு

Editorial   / 2025 ஜனவரி 22 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச கடைகளிலும் இந்தப் பொருட்களை புதிய விலையில் புதன்கிழமை (22) முதல் வாங்கலாம் என்று சதொச மேலும் கூறுகிறது.

ரூ.1,095 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் உள்ளூர் முந்திரி பருப்பு (கஜூ) ரூ.100 குறைந்து  995  ரூபாய்

ரூ.340 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் தும்புறு நிற சீனி ரூ.40 குறைந்து ரூ. 300 ஆகவும்,

 ரூ.210 ஆக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது  அதன் புதிய விலை 180 ரூபாயாகும். 

ரூ.795 ஆக இருந்த ஒரு கிலோ சிவப்பு பட்டாணி (சிவப்பு கௌபி) ரூ.30 குறைந்து ரூ.765 ஆகவும்,

ரூ.960 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் நெத்தலி ரூ.20 குறைந்து 940 ரூபாவாகவும் உள்ளது.

 ரூ.845 ஆக இருந்த ஒரு கிலோ கிராம் காய்ந்த மிளகாய் ரூ.15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை  830 ரூபாவாகும்,

 ஒரு கிலோவின் விலை ரூ. ரூ.655 ஆக இருந்த பாஸ்மதி அரிசியின் புதிய விலை ரூ.645 ஆக உயர்ந்தது.

655 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பாஸ்மதி அரிசியின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டதன் மூலம், அதன் புதிய விலை 645 ரூபாயாக மாறியுள்ளது.

240 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 230 ரூபாயாகும்.

290 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கிராம் பருப்பு 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 288 ரூபாகும்.

242 ரூபாயாக இருந்த வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 240 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X