Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நூராணியா பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலி ரத்னவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம் ரத்னநாயகாவின் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே நூராணியா மையவாடி வீதியில் ஐஸ் விற்பனையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வர்த்தகரிடம் இருந்து 10 கிராம் 420 மில்லி கிராம் ஐஸ்,10,700 ரூபாய் பணம்,5 வங்கிகளின் அட்டைகள், போதைப் பொருளை நிறுக்கும் பிரிக்கும் இயந்திரம்,கைப்பை உட்பட பல பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago