2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஹக்கப் பட்டாசை மிதித்த சிறுவனுக்கு காயம்

Editorial   / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அலதெனிய பொல் அத்துவிலுள்ள வீதிக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புதைக்கப்பட்டிருந்த ஹக்கப்பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவன், அந்த அக்கப்பட்டாசு வெடித்தமையால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போத்தல் என்று நினைத்தே ஹக்கப்பட்டாசை அச்சிறுவன் மிதித்துள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.

ஹக்கப்பட்டாசை புதைத்ததாகக் கூறப்படும் ஒருவரை அலதெனிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதான சந்தேகநபர்,   விலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள், பட்டாசு மற்றும் இரும்பு குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்​தேகநபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, இராணுவத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த 25 வயதான இளைஞனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ​பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .