2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஸாஹிராவில் 70 மாணவிகளின் பெறுபேறுகள் வெளியாகின

Editorial   / 2024 ஜூலை 04 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின்,க.பொ.த.உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் மாணவர்கள் கடந்த மாதம் முறைப்பாடு செய்திருந்தனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களின் பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுடைய பெறுபேறுகளை வெளியிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்..

அதனடிப்படையில் பெறுபேறுகள்  வெளியிடப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .