Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 16 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நிலவும் வறண்ட வானிலை மேலும் தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கொழும்பில் 28 செல்சியஸாக இருக்க வேண்டிய வெப்பநிலை இன்று தற்போது 31 செல்சியஸாக உயர்ந்துள்ளது.
இந்த அதிக வெப்பநிலை மக்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிப்பதாக அமைந்துள்ளதுடன், அது குறித்து தற்போதைய சூழ்நிலையில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
அதிக வெப்பநிலை காரணமாக உடல் வியர்வையாக நீர் மற்றும் உப்புகளை இழக்கிறது, இது ஆரோக்கியமான நபர்களுக்கு கூட நீரிழப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
இந்த நாட்களில் வெளியில் வேலை செய்பவர்கள், குறிப்பாக வீதிகளில் வேலை செய்பவர்கள் மற்றும் நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான நீரிழப்பு இதயத்தையும் மூளையையும் பாதிப்பதுட்ன, இது வெப்ப பக்கவாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நிலைமைகளைத் தவிர்க்க, அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago