Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத பாகங்கள் என்பனவற்றை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு சோதனை செய்து கண்டெடுத்துள்ளது.
சீதுவ லியனகெமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 8 ஏக்கர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.
விமான எதிர்ப்பு வெடிமருந்துகள் இரண்டு, ஒரு கைக்குண்டு, ஒரு எல்எம்ஜி தோட்டாக்கள், இரண்டு வகையான வெடிபொருட்கள், ஒரு சிறிய துப்பாக்கியின் 17 பாகங்கள், ஒரு டெட்டனேட்டர், இரண்டு வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் பத்து தோட்டாக்கள் அடங்கிய சரம் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுலியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தின் நிறைவின் போது மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் இவற்றை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இவற்றை எடுத்துச் சென்று இந்தத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றை மறைத்து வைத்தவர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களைக் கைது செய்ய களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago