2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

“வாகன வரிகளைக் குறைக்க முடியாது”

S.Renuka   / 2025 மார்ச் 25 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தின்படி, வாகன வரிகளைக் குறைக்க முடியாது, மேலும் இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்ல் திங்கட்கிழமை (24) அன்று உரையாற்றிய அவர்,

IMF ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் எந்த வரிச் சலுகைகளையும் வழங்க முடியாது என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

"இந்த ஆண்டு வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 300 மில்லியன் முதல் ரூ. 350 பில்லியன் வரை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மின்சார மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள் உட்பட பல்வேறு வாகன மாதிரிகள் நாட்டிற்கு வந்துள்ளன.

இருப்பினும், சுங்க அனுமதி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், மொத்த வரி வருவாயை அரசாங்கத்தால் இன்னும் கணக்கிட முடியவில்லை," என்று துமிந்த ஹுலங்கமுவா கூறினார்.

1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .