2025 ஜனவரி 23, வியாழக்கிழமை

வெள்ளவத்தையில் பெண் கடத்தல்: முன்னாள் பொலிஸ் கைது

Simrith   / 2025 ஜனவரி 22 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தைப் பகுதியில் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கடந்த 18 ஆம் திகதி திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண் ஒருவர் வேன் ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் பிற பெறுமதியான பொருட்களைக் கொள்ளை அடித்துக்கொண்டு வெலிக்கடையில் பெண்ணைக் கடத்தல்காரர்கள் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் முன்னர் பொலிஸ் பிரிவில் கடமையாற்றி சேவையிலிருந்து பணி இடைநிறுத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X