Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 02, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பணம் வைப்பிலிடப்படுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.
இதற்கமைய, அந்த நிதி நிறுவனங்களிடம் இருந்து அது பற்றிய தகவல் அறிக்கைகளை பெறுவதுதான் முதல் நடவடிக்கை என்று, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளிநாடுகளில் பணத்தை வைப்பிலிடும் முறைகள் குறித்து இந்த நாட்களில் சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகின்றன.
இது மிகவும் கடினமான பணியாக இருந்தாலும், அதற்காக உன்னிப்பாக செயற்படுவதாக கூறும் அந்த வட்டாரங்கள், இதுபற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால், சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வர அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் செயற்படுவதாக சில மேடைகளில் அடிக்கடி பிரசாரம் செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. (AN)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago