2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

விலங்குப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய யோசனை

Simrith   / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அரசியல்வாதி ஒருவரால் சிங்கள சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட "சிறு குடும்பம்" (புஞ்சி பவுல ரத்தரன்) என்ற கருத்தாக்கத்தை விலங்குகள் தங்கள் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும் என ஜனசேத பெரமுனவின் தலைவர், பத்தரமுல்லே சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சீலரதன தேரர், சிங்கள இனத்தை அழிக்கும் நோக்கில் 1980களில் 'புஞ்சி பவுல ரத்தன்' யோசனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.  

"இந்தக் கருத்து விலங்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டவுடன், அவைகளும் படிப்படியாக அழிவை சந்திக்கும். எவ்வாறாயினும், இந்த கருத்து விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது, இப்போது அரசாங்கம் இந்த விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைத் தாக்குமாறு பரிந்துரைக்கிறது, ”என்று தேரர் கூறினார்.  

மக்கள் பயிர்களை அழிக்கும் விலங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் லால்காந்த அண்மையில் பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார். 

பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கொல்ல அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என கிராமப்புற சமூகங்களை தவறாக வழிநடத்தும் வகையில் இவ்வாறான அறிக்கைகள் அமையும் என தேரர் வாதிட்டார்.  

"எந்தவொரு மிருகத்தையும் கொன்றால், பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள், அது சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும்" என்று சீலரதன தேரர் மேலும் கூறினார்.  

மேலும், இவ்வாறான கருத்துக்கள் சிங்கள மக்களை நாட்டிலிருந்து அகற்றுவதுடன் விலங்குகளை ஒழிப்பதற்கான பரந்த நிகழ்ச்சி நிரலை பிரதிபலிக்கின்றன எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.  

லால்காந்தவின் கூற்று நடைமுறைச் சாத்தியமற்றது என விமர்சித்த தேரர், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் புதிய சட்டங்களை முன்வைத்தமைக்காக அமைச்சர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .