Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 21 , பி.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விலங்குகளின் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது. இந்த முயற்சியானது நிலையான கட்டுப்பாட்டுக்கான பல உத்திகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.
தேங்காய் மற்றும் பழங்கள் போன்ற முக்கிய பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் டோக் குரங்குகள் மற்றும் பிற விலங்குகளை கட்டுப்படுத்த நிரந்தரமான தீர்வுகளை அடையாளம் காண்பது குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
உடனடி மற்றும் நடைமுறை வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டங்களை அமைச்சு சுட்டிக்காட்டியது.
விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், விவசாய திணைக்களம், விவசாய ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உட்பட சுமார் 15 நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago