2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

’’வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய முடியாது’’

Simrith   / 2024 நவம்பர் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்கவை எம்.பி.யாக நியமித்தமை தொடர்பான சர்ச்சை தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரருக்கு கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய பட்டியலின் பெயரை உத்தியோகபூர்வமாக சமர்ப்பித்ததன் பின்னர் வர்த்தமானி மூலம் ஆணைக்குழு தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

“தேசியப் பட்டியலில் உள்வாங்கவேண்டியவர்களின் பெயர்களை  கட்சியின் செயலாளர் உத்தியோகபூர்வமாக கையளித்தவுடன், ஆணைக்குழு அதனை உத்தியோகபூர்வமாகக் கருதி அதன்படி செயற்படுகிறது” என்று அவர் விளக்கினார். கட்சியின் உள்விவகாரங்களில் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய முடியாது எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் ஷியாமலா பெரேரா தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எனினும், இந்த நியமனம் ஒருமனதாக எடுக்கப்படாததால் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .