Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 01 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற இளைஞன் மீது கத்தியால் குத்தியதில், அக்கத்தி வயிற்றில் சிக்கிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் இளைஞன் இன்று (1) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மஸ்ஜிதில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் கத்தியால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞன் கூறுகையில், மோதலை தவிர்க்க முயன்ற போது, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் இருந்து கத்தியால் குத்தியதாக தெரிவித்தார்.
கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞனை இவ்விரு தரப்பினரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
இரத்தம் வெளியேறாமல் இருக்க அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவர் வரும் வரை கத்தியை கழற்றாமல் இளைஞனை வார்டில் வைத்திருந்தனர். கத்தியை அகற்றும் சத்திரசிகிச்சை புத்தளம் வைத்தியசாலையில் இன்று காலை ஆரம்பமானது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago