Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 06, வியாழக்கிழமை
Freelancer / 2025 மார்ச் 05 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதனைக் கதைத்தாலும் அது பிரச்சினையாகிறது .கேலிக்குரியதாகிறது. எனவே அரசாங்கத்தில் உள்ளவர்கள் வாய்மூடி இருப்பதே சிறந்தது.அரச அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள் செய்தால் பாரிய நெருக்கடிகள் தான் ஏற்படும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனினும் வாக்களிப்புக்கான திகதி அறிவிக்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் நிறைவு பெறும் தினத்தன்று வாக்களிப்பு திகதியை அறிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தும் என்பதால் இந்த தேர்தல் அரசாங்கத்துக்கு மிகவும் முக்கியமானது.சவாலானது.
காட்டு விலங்குகளை எதிர்வரும் 15 ஆம் திகதி கணக்கெடுப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது .இதுவும் விமர்சனங்களுக்கும் கிண்டல்களுக்குமுள்ளாகியுள்ளது அரச அதிகாரிகள் செய்ய வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள் செய்தால் பாரிய நெருக்கடிகள் ஏற்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago