Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 27, புதன்கிழமை
Editorial / 2024 நவம்பர் 27 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.கே.ஜி.கபில
இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மதியம் வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் அலுவலக உதவியாளரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறி ஷ்யாமலி வீரசிங்க 55 வயதான அலுவலக உதவியாளர் ஆவார், அவர் தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார், இங்கிலாந்து மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையுடன் வசிக்கும் அந்த பெண், இலங்கையின் பன்னிப்பிட்டியவில் வசிக்கிறார்.
அவர் செவ்வாய்க்கிழமை (26) மதியம் 01.30 மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-504 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவளது கைப்பையில் 14 இலட்சத்து இருபத்து மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியான 2,700 ஸ்டெர்லிங் பவுண்ஸ், 02 புதிய வகை கையடக்கத் தொலைபேசிகள் (ஐ போன்) மற்றும் 02 சாம்சுங் ரக கைத்தொலைபேசிகள் இருந்தன.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இந்த கைப் பை தொலைந்து போனதால், அந்த பெண் இலங்கை விமான போக்குவரத்து அதிகாரசபையிடம் புகார் செய்துள்ளார்.
குறித்த விமானத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இது தொடர்பில் விமானத்தின் விமானிக்கு அறிவித்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளையும் அவர்களது பயணப் பொதிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன கைப்பையை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 60 வயதுடைய கணக்காளர் ஒருவரிடமிருந்த மீட்ட அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், கனடாவிலும் இலங்கையிலும் இரட்டைக் குடியுரிமையைப் பெற்றவர் ஆவார்.
அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே திருடப்பட்ட ஸ்ரேலிங் பவுண்டுகளைப் பயன்படுத்தி விமானத்தில் விற்கப்பட்ட 06 விஸ்கி போத்தல்கள் மற்றும் 03 சுவடா விலவுன் போத்தல்களை வாங்கியுள்ளார், மேலும் மீதமுள்ள ஸ்டெர்லிங் மற்றும் மொபைல் போன்களும் அவரது கைப்பையில் இருந்து மீட்கப்பட்டனர்.
பின்னர், இலங்கை புலனாய்வு அதிகாரிகள், அந்த பயணியை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர், அவர்கள் பயணியை கைது செய்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அ திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களுடன் அவரை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (27) ஆஜர்படுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago