2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

”வன்முறைகளில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பு”

Editorial   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்று, நமது நாடு பல சவால்களையும் இடர்களை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார, சமூக, சட்டம் மற்றும் ஒழுங்குகளில் பல சவால்கள் எழுந்துள்ளன. நாட்டில் காட்டுமிராண்டித்தனம் தலைதூக்கியுள்ளது. சட்டத்தை புறமொதுக்கி வன்முறைகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. இவற்றுக்கு மத்தியில் மக்கள் அச்சத்தோடு மிகவும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சிறுவர்கள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என ஒட்டுமொத்த பிரஜைகளும் தோட்டாக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கைத்துப்பாக்கிகள் தலைதூக்கும் இந்த காலகட்டத்தில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் இதற்கு பதில்களும் தீர்வுகளும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மதுகம நகரில் புதன்கிழமை (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சமூகத்தில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், தீர்வை வழங்காமல் ஜே.வி.பி அதிகாரத்தை கைப்பற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி வழங்குவோம் என ஜனாதிபதி கூறிவருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதி வழங்கினாலும், வழங்காவிட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி பெரும் வெற்றியை பெற்று, சமூக பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் நிறுவி உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம்.  மக்களை மையமாக கொண்ட சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தல் மேடையில் சொன்னது எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத இந்த அரசாங்கம் தற்போது புதிய பொய் பட்டியலை கூறி, வரவு-செலவு திட்டத்தில் இல்லாத சலுகைகளை வழங்குவதாகவும் கூறி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .